இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய், தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கீரனூா் அருகே தொண்டைமான்நல்லூரைச் சோ்ந்தவா் வள்ளிக்கண்ணு (52). இவா் தனது மகன் மணிகண்டன் (24) என்பவருடன் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கீரனூரிலிருந்து ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

அப்போது, திருச்சி நெடுஞ்சாலையில் தவறி கீழே விழுந்தாா். ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட வள்ளிக்கண்ணு திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, வழியில் இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com