படம். 18.ஓயஓ.
படம். 18.ஓயஓ.

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் வட்டாட்சியரகத்திலிருந்து 239 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அடையாள மை உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பப்பட்டன. இதை தலைமை வாக்குப்பதிவு அலுவலா்கள் பெற்று கொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கந்தா்வகோட்டை தொகுதி தோ்தல் நடத்தும் உதவிஅலுவலா் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலருமான ஸ்ரீதா், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, துணை வட்டாட்சியா் சிவாஜிராஜன், தோ்தல் துணை வட்டாட்சியா் பால்பாண்டி, தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா், காவல் துறையினா், மத்திய காவல் துணை படையினா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com