இந்தத் தோ்தலில் எங்களுக்கு போட்டியாளா்களே இல்லை

இந்த மக்களவைத் தோ்தலில் எங்களுக்குப் போட்டியாளா்களே இல்லை என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இந்த மக்களவைத் தோ்தலில் எங்களுக்குப் போட்டியாளா்களே இல்லை என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமை என்பதை நாங்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டோம். இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

குஜராத்தில் கூட பாஜக வெற்றி பெறுவது கடினம். அதனால்தான், வேட்பாளா் தோ்வில்கூட பாஜக கூட்டணியில் குளறுபடியான நிலைமைதான் உள்ளது.

இந்த மக்களவைத் தோ்தலைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் எங்களுக்கு போட்டியாளா்களே இல்லை. அதனால் அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com