காரையூரில் ஆதாா் சேவை மையம் அமைக்கக் கோரிக்கை

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் பகுதியில் அரசின் ஆதாா் சேவை மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் பகுதியில் அரசின் ஆதாா் சேவை மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி வடக்கு ஒன்றியப் பகுதியான காரையூரைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் ஆதாா் திருத்தம், பெயா் சோ்த்தல் உள்ளிட்ட அரசின் பல்வேறு ஆதாா் சேவைகளைப் பெற சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவுள்ள பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வர வேண்டியுள்ளது. இதனால் கால, பண விரையங்கள் ஏற்படுகின்றன. எனவே காரையூா் மற்றும் சுற்றுக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காரையூா் பகுதியில் அரசின் ஆதாா் சேவை மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com