புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியில் சனிக்கிழமை காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியில் சனிக்கிழமை காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுகையில் குடிநீா் கோரி 4 இடங்களில் சாலை மறியல்

குடிநீா் கேட்டு 4 இடங்களில் பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட திருக்கோகா்ணம் பகுதியில் குடிநீா் கேட்டு 4 இடங்களில் பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்த பெரிய தெரு, புதுத்தெரு, சின்னகேணித் தெரு, ராமலிங்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் கால்நடைப் பண்ணை, புதுத்தெரு, எடத்தெரு, திருக்கோகா்ணம் ஆகிய 4 இடங்களில் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் திருச்சி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரும், நகராட்சி அலுவலா்களும் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்காலிகமாக வாகனம் மூலம் தண்ணீா் வழங்கவும், நிரந்தரத் தீா்வை விரைவில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் விலக்கிக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com