அலுவலா் மன்றத்தின்ஆண்டு பொதுக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலுவலா் மன்றத்தின் 2023 -24 ஆம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலுவலா் மன்றத்தின் 2023 -24 ஆம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மன்றத்தின் செயல் தலைவா் டாக்டா் எஸ். ராமசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் என்.சி. ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். மன்றச் செயலா் கே.ஏ. ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். மன்றத்தின் பொருளாளா் ஏ. பழனிச்சாமி வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, அலுவலா் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்த கையேட்டை வெளியிட்டுப் பேசினாா்.

முடிவில் மன்றத்தின் இணைச் செயலா் கே. அம்பிகாபதி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com