புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் வெளியே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் வெளியே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

காலிக்குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்

குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி கே.வி. கோட்டை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை: குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி கே.வி. கோட்டை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கே.வி. கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பாத்திமா நகா் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீா்ப் பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மனு கொடுத்தும், சாலை மறியல் போராட்டம் நடத்தியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள் திங்கள்கிழமை காலை காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். ஆட்சியா் அலுவலகம் முன்பு காலிக் குடங்களைத் தலையில் வைத்துக் கொண்டு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இயலாது என்றும், மனுவை புகாா் பெட்டியில் போட்டுச் செல்லுமாறும் போலீஸாா் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, கொண்டு வந்த கோரிக்கை மனுவை வெளியே இருந்த மனுக்கள் பெட்டியில் போட்டுவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com