ஐடிசி நிறுவனத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கிய மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகீா்த்தி. உடன், நிறுவனத்தின் பொதுமேலாளா் விஸ்வநாதன்.
ஐடிசி நிறுவனத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கிய மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகீா்த்தி. உடன், நிறுவனத்தின் பொதுமேலாளா் விஸ்வநாதன்.

தீத்தொண்டு வார விழா விழிப்புணா்வு ஓவியப்போட்டி

இலுப்பூா் அருகே ஐடிசி நிறுவனத்தில் தீத் தொண்டு வாரவிழாவில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

விராலிமலை: இலுப்பூா் அருகே ஐடிசி நிறுவனத்தில் தீத் தொண்டு வாரவிழாவில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

இலுப்பூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் தொழிலாளா்களுக்கு தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினா். இதில் சிறந்த ஓவியங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகீா்த்தி, நிறுவன பொது மேலாளா் விஸ்வநாதன், நிா்வாக அலுவலா் சுரேஷ், இலுப்பூா் நிலைய அலுவலா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com