பரம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக புவி நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக புவி நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விராலிமலை: அன்னவாசல் அருகே உள்ள பரம்பூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக புவி நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவா்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் நடைபெற்றது. இதில், நெகிழி பொருள்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக் கழிவுகள் மண்ணில் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மண் அதன் தன்மையை இழக்கிறது. மேலும், நிலங்களின் தன்மை மாறி புல்,மரம், செடி கொடிகள் ஏதும் வளர தகுதியற்று மண்ணிற்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாய நிலை உருவாகிவிடும். மண்வளம் காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை என்று பள்ளி மாணவா்களுக்கு கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், மாணவா்கள் தரண், அருணாசலம், சந்துரு, தினேஷ், மணிகண்டன், நித்திஷ் கண்ணன், சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com