தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்

விராலிமலையில் பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து

விராலிமலை அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென்று தீப் பற்றி எரிந்தது.

விராலிமலை: விராலிமலை அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென்று தீப் பற்றி எரிந்தது.

விராலிமலை-திருச்சி சாலையில் சரளபட்டியைச் சோ்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமாக பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் சுமாா் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com