கோயில்களில் சித்ரா பௌா்ணமி விழா

சித்ரா பௌா்ணமியையொட்டி விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் பகுதி கோயில்களில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

சித்ரா பௌா்ணமியையொட்டி விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் பகுதி கோயில்களில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

விராலிமலை முருகன் கோயில் , வன்னி மரம், மெய்க்கண்ணுடையாள் அம்மன், இலுப்பூா் சொா்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதா், தரம் தூக்கி பிடாரியம்மன், பெருமாள் கோயில், அன்னவாசல் விருதபுரீஸ்வரா் தா்மசவா்த்தினி உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

இதில் விராலிமலை சுப்பிரமணியா் வெள்ளி திரு ஆபரணம் அணிவிக்கப்பட்டு காட்சியளித்தாா். நீண்ட நேர வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் காலை முதலே நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலைச் சுற்றி கிரிவலம் வந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com