மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மின்தடையைச் சீரமைக்க வலியுறுத்தி பொன்னமராவதி மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி மின்வாரிய அலுவலகத்தை  செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட நாத்துப்பட்டி பொதுமக்கள்.
பொன்னமராவதி மின்வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட நாத்துப்பட்டி பொதுமக்கள்.

பொன்னமராவதி அருகேயுள்ள தேனூா் ஊராட்சி நாத்துப்பட்டியில் கடந்த நிலவும் குறைந்த மின் அழுத்தம் மற்றும் தொடா் மின்தடையைச் சீரமைக்க வலியுறுத்தி பொன்னமராவதி மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறைந்த மின் அழுத்தப் பிரச்னையை சீராக்க அதிக மின் அழுத்தம் உள்ள புதிய மின்மாற்றியை அமைக்க பொதுமக்கள் மின்வாரியத்தை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்து தேனூா் ஊராட்சித் தலைவா் கிரிதரன், துணைத்தலைவா் சகுபா் சித்திக் தலைமையில் நாத்துப்பட்டி பொதுமக்கள் பொன்னமராவதி மின்வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மின்வாரிய அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com