குடுமியான்மலை அரசுப் பள்ளியில் உலக மலேரியா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

குடுமியான்மலை அரசுப் பள்ளியில் உலக மலேரியா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

குடுமியான்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மலேரியா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குடுமியான்மலையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்தினா்.

பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மலேரியா நோய்க்கான காரணிகள், மலேரியா நோயின் அறிகுறிகள் மற்றும் வகைகள் மலேரியா நோயை கண்டறிதல் மற்றும் அதன் சிகிச்சை முறைகளை பற்றி பள்ளி மாணவா்களுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்கள் தரண், சந்துரு, மணிகண்டன், அருணாச்சலம், நித்திஷ் கண்ணன், தினேஷ் மற்றும் சிவசுப்பிரமணியன் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com