ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக உதவியாளா் அய்யப்பன்
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக உதவியாளா் அய்யப்பன்

தலைமை ஆசிரியரை கண்டித்து ஆய்வக உதவியாளா் போராட்டம்

ஆலங்குடி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து, அப்பள்ளியின் ஆய்வக உதவியாளா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சோ்ந்தவா் ஆா். அய்யப்பன்(36). ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வரும் இவா், அப்பள்ளியின் தலைமையாசிரியா் ரெத்தினகுமாா், தனிப்பட்ட விரோதத்தால் தனக்கு தொடா்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், போட்டித் தோ்வுக்காக துறைரீதியான அனுமதி கோரி மூன்று மாதங்களாகியும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று புகாா் தெரிவித்து,

தலைமை ஆசிரியரை கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை கோரியும் புதன்கிழமை பள்ளியில் அய்யப்பன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரிடம், கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை தொடா்ந்து , போராட்டத்தை கைவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com