புதுகை அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை அருகே அரசின் பொது விநியோகத் திட்ட அரிசி சுமாா் 500 கிலோ கடத்திச் செல்லப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் புதன்கிழமை பகல் 12 மணிக்கு காரைக்குடி சாலையில் கடியாப்பட்டி பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் சோதனையிட்டபோது 10 மூட்டைகளில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து காரை ஓட்டி வந்த திருமயம் இருதயபுரம் அருகேயுள்ள மகமாயிபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ராமநாதன் (38) கைது செய்யப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com