படம். ஓயஓ.24.
படம். ஓயஓ.24.

பெருங்களூா் பிடாரியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

பெருங்களூா் ஐந்து கரை நாட்டைச் சோ்ந்த பிடாரியம்மன் கோயில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஒருபகுதியாக, பிடாரியம்மனுக்கு புதன்கிழமை மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் அலங்கரிக்கப்பட்ட சிறு குடங்களில் தானியங்களுடன், தென்னை பாலை, மாங்கொத்து, மரப்பால் எடுத்து வந்து ஒன்று சோ்ந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டி மது எடுத்து வந்து பிடாரியம்மனுக்கு ஊற்றி அபிஷேக பூஜை செய்தனா். இளைஞா்கள் ஒரே வண்ணத்தில் உடை உடுத்தி கம்பத்தாட்டம், பெருசலங்கை ஆட்டம், பாடலுக்கு ஏற்ப ஆட்டம் ஆடினா். பெண்கள் கும்மியாட்டம் போட்டு குலவையிட்டனா். கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com