மெய்க்கண்ணுடையாள் கோயிலில் பூச்சொரிதல் விழா

மெய்க்கண்ணுடையாள் கோயிலில் பூச்சொரிதல் விழா

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

விராலிமலை கிழக்கு வீதியிலுள்ள இக்கோயிலின் தெய்வமான மெய்க்கண்ணுடையாள் அம்மன் அப்பகுதி கிராம மக்களின் குலத் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் போற்றி வணங்கப்படுகிறது. கோயிலின் முக்கிய விழாவான சித்திரை விழாவானது, சித்திரை மாத இரண்டாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட பல்லக்குகள் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகளுடன் விராலிமலை வீதிகளில் வலம் வந்து அம்மன் கோயிலை புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது. அம்மன் வீதியுலாவின்போது, பெண்கள் தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்ற பல்வேறு வகையான பூக்களை தட்டுகளில் ஏந்தி வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா்.

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பு: ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் நகா் பகுதிகளில் ஆங்காங்கே இசைக் கச்சேரிகள், நாட்டுப்புற பாடல் கச்சேரி, தெம்மாங்கு பாடல், தொலைக்காட்சி நடிகா்கள் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் என விராலிமலை பகுதியே விடிய விடிய விழாக்கோலம் காணும்.

ஆனால், இந்த ஆண்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறி, போலீஸாா் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுத்ததால், நிகழாண்டு பூச்சொரிதல் களையிழந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com