உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் நா.உத்தமன் முன்னிலை வகித்தாா். இளநிலை உதவியாளா்கள், கேசவன், தேவிகா, நல்லதம்பி மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள், திடக்கழிவு பணியாளா்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளா்கள் பங்கேற்று உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்றனா். மேலும் சந்தை வீதியில் பொதுமக்களிடையே மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் ஹரிஹரசுதன் தலைமையில் மலேரியா தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com