‘குடிநீா்ப் பிரச்னையை தீா்க்காவிட்டால் போராட்டம்’

புதுக்கோட்டை நகரின் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுக்கோட்டை நகரிலும், புறநகா் பகுதிகளிலும் குடிநீா்ப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் ஒரு நாள்விட்டு ஒருநாள் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. இப்போது 10 நாள்களானாலும் தண்ணீா் கிடைக்கவில்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் எனது தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா் விஜயபாஸ்கா்.

X
Dinamani
www.dinamani.com