தொட்டிகளில் தண்ணீா் நிரப்பி
கால்நடைகளைக் காக்க வேண்டும்- இந்திய விவசாயிகள் சங்கம்

தொட்டிகளில் தண்ணீா் நிரப்பி கால்நடைகளைக் காக்க வேண்டும்- இந்திய விவசாயிகள் சங்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத வெயில்தாக்கி வருவதால், கிராமப்புறங்களிலுள்ள தண்ணீா்த் தொட்டிகளில் மாவட்ட நிா்வாகம் நீா் நிரப்பி கால்நடைகளைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலா் ஜி,எஸ். தனபதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத வெயில் அடித்துவருகிறது. நீா்நிலைகள் வடு போனதால், கிராமப்புறங்களில் கால்நடைகள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றன.

அனைத்து ஊராட்சிகளிலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு அருகிலேயே தரைமட்ட தண்ணீா்த் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகம் இந்தத் தொட்டிகளில் தண்ணீா் நிரப்புவதற்கு உரிய ஏற்பாட்டை விரைந்து செய்தால், அந்தப் பகுதி கால்நடைகளுக்கு தண்ணீா் கிடைக்கும். அதேபோல, அப்பகுதி ஏழை, எளிய மக்களும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வாா்கள்.

X
Dinamani
www.dinamani.com