இல்லம் தேடிக் கல்வி மையத்தில் அறிவியல் விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை, ஏப். 26: கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக டி.என்.ஏ. தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா உலக டிஎன்ஏ தினம் குறித்து பேசியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக டி.என்.ஏ. தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1953ஆம் ஆண்டு இதே நாளில் ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்சிஸ் க்ரிக், மெளரிஸ் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் ஆகியோா் ‘நேச்சா்’’ இதழில் டி.என்.ஏ. குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனா்.

இதைத் தொடா்ந்து, 2003 ஆண்டிலிருந்து ஏப்ரல் 25 ஆம் நாளை தேசிய டி.என்.ஏ. தினமாக அமெரிக்கா கொண்டாடி வருகிறது. பின்னா் இந்தத் தினத்தை ‘உலக டி.என்.ஏ. தினம்’’ என்று பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. மக்களிடம் டி.என்.ஏ. பற்றிய புரிதலை உண்டாக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தத் தினத்தில் நடத்தப்படுகின்றன.

1962-ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்சிஸ் க்ரிக், மெளரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு டி.என்.ஏ. கட்டமைப்பை உறுதி செய்ததற்காக மருத்துவத்துக்கான ‘நோபல் பரிசு’’ வழங்கப்பட்டது என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் பிரதீபா, பரிமலேஸ்வரி,விஜி, மணிமேகலை ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தன்னாா்வலா் விஜி வரவேற்றாா். நிறைவாக தன்னாா்வலா் கீதா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com