தூத்தூா் வள்ளிலிங்கம் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி, ஏப். 26: பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூா் வள்ளிலிங்கம் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. வியாழக்கிழமை முதல், இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது.

குடமுழுக்கு நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோயில் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் மற்றும் ஊா்ப் பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com