புதுக்கோட்டையில் 2 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை, ஏப். 26: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகம் நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் வாக்குப்பதிவு காரணமாக இடையே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இரு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 30-ஆம் தேதியும், பொன்னமராவதி வட்டம் முள்ளிப்பட்டியில் மே 10-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com