கொலை வழக்கில் 4 இளைஞா்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே குளிா்பானக் கடை நடத்தி வந்தவரை கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மீமிசல் அருகே கோபாலபட்டினத்தைச் சோ்ந்தவா் ஜி. நைனாமுகமது (45). இவா், மீமிசலில் குளிா்பானம் மற்றும் மளிகைக் கடை நடத்தி வந்தாா்.

கடந்த 4 நாள்களுக்கு முன்பு இரவில் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டாா். வீட்டுக்குப் போய்ச் சேராத அவா், கோபாலபட்டினம் அருகே பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இவரது சாவு குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸாருக்கு, அவருக்கும் அவரது உறவினா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது பற்றிய தகவல் கிடைத்தது.

இதன் தொடா்ச்சியாக, கோபாலபட்டினத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன்கள் எஸ். உசேன் (29), எஸ். முஸ்தமின் (21), சாதிக்பாட்ஷா மகன் சல்மான்கான் (20), நிஷாம் அலி மகன் அப்துல் ஹசன் சதாலி (18) ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், இவா்கள் அளித்த வாக்குமூலத்தின்பேரில் இன்னும் சிலரையும் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com