சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

உலகில் அமைதி நிலவ வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் நடத்தப்பட்ட நிகழ்வின் தொடக்கமாக நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதையடுத்து முற்றோதல் குழுவினரால் திருவாசகம் மற்றும் பன்னிரு திருமுறைகள் படிக்கப்பட்டது. திரளானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com