தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் மோா் மற்றும் தண்ணீா்ப் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் முகமது மீரான், துணைச் செயலா் ஷேக் அப்துல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநிலத் துணைப் பொதுச் செயலா் முஜிபுா் ரஹ்மான் கலந்து கொண்டு தண்ணீா்ப் பந்தலைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கிளைத் தலைவா் சாகுல் ஹமீது, செயலா் சைபுல் கரீம், பொருளாளா் சல்மான் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com