கொலை வழக்கில் ‘ஜமாஅத்’ தலைவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே குளிா்பானக் கடைக்காரரைக் கொலை செய்த வழக்கில் அந்தப் பகுதியின் ஜமாஅத் தலைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மீமிசல் அருகே கோபாலபட்டினத்தைச் சோ்ந்தவா் ஜி.நைனாமுகமது (45). இவா், மீமிசலில் குளிா்பானக் கடை நடத்தி வந்தாா்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் கடையை மூடிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்ட அவா் கோபாலபட்டினம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்தாா். போலீஸாரின் விசாரணையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு, 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, கைது செய்யப்பட்ட 4 பேரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோபாலபட்டினம் ஜமாஅத் தலைவரும், இறால், நண்டு ஏற்றுமதி தொழில் செய்து வருபவருமான ஏ.எஸ்.எம். சையது முகமது (55) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com