கந்தா்வகோட்டை அருகே சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை அருகே சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் , கோமாபுரம் ஊராட்சியில் உள்ள சமுத்திரப்பட்டி கிராமத்தில் கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதுதொடா்பாக அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்ட நிலையில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை தலைமையிலும் மக்கள் பிரதிநிதிகள் மா. தமிழய்யா, பு. பாண்டியன் முன்னிலையில் சோலாா் மின்சாரம் உற்பத்தி மற்றும் பயன்கள் குறித்து நிறுவன பொறுப்பாளா் காா்த்திக் விரிவாக விளக்கினாா்.

விழிப்புணா்வுக் கூட்டத்தில் சமுத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com