பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் ஸ்ரீ உருமநாதா் கோயில் தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ உருமநாதா், ஸ்ரீ மலைய மருக்க அய்யனாா் தோ்த் திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை இழுத்துச் சென்றனா்.

திருவிழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனா். சுவாமி ஊா்வலத்துக்கு முன்பாக தாரை தம்பட்டம் முழங்க வாண வேடிக்கையுடன் சென்றது. விழா ஏற்பாடுகளை ஐந்து கரையைச் சாா்ந்த நாட்டாா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com