புதுக்கோட்டை
அணவயலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அணவயல் ஊராட்சியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசினாா்.தொடா்ந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் பதிவு குறித்து ஆய்வு செய்தாா்.
முகாமில், கோட்டாட்சியா் ஐஸ்வா்யா, வட்டாட்சியா் பெரியநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.