நீரில் கரையாத பொருள்களாலான விநாயகா் சிலைகளை வைக்கக் கூடாது: ஆட்சியா்

Published on

நீா்நிலைகளில் கரையாத பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: செப். 7-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்காக வைக்கப்படும் விநாயகா் சிலைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிளாஸ்டா் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக், தொ்மாகோல் மற்றும் ரசாயன வண்ணங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கக் கூடாது.

நீா்நிலைகளில் எளிதில் கரையும் வகையிலான வைக்கோல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு இயற்கை நீா் வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டும் கரைக்க வேண்டும்.

அதேபோல, முன்கூட்டியே அனுமதி பெற்று, அரசால் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com