ரத்த தான முகாம்

Published on

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முதல்வா் ம. ஜெயபால், புதுநகா் வட்டார தலைமை மருத்துவா் மணிமாறன்ஆகியோா் தலைமை வகித்தனா். மருத்துவா் பரணிதரன், மருத்துவா் டெரிக் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், 50 மாணவ மாணவிகள் ரத்த தானம் அளித்தனா். தஞ்சை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலா்கள் ரத்தத்தை சேகரித்தனா்.

முகாமில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முகமது யூசுப், சுகாதார ஆய்வாளா்கள் நல்லமுத்து, திருநாவுக்கரசு, மகேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை நாட்டுநலப் பணி திட்ட அலுவலா் சி. செல்வகுமாா், ஜேசு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com