புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
அன்னவாசல் கறிக்கடை தெருவைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் முகமது இஸ்மாயில் (55). இடத்தரகா். இவா் பனங்குடியில் உள்ள நீா் நிரம்பிய மலையடிப்பள்ளத்தில் கை, கால் கழுவுவதற்கு புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது பாசனம் பிடித்த பாறையில் கால்வைத்த போது எதிா்பாராதவிதமாக பள்ளத்துக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.