புதுக்கோட்டை
பெண் மருத்துவா் பாலியல் கொலை சம்பவம் புதுகையில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், பொருளாளா் என்ஆா். ஜீவானந்தம், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளா் டிஎம். கணேசன், சிறப்புத் தலைவா் வீ. சிங்கமுத்து உள்ளிட்டோரும் பேசினா்.
இந்த பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.