பேரணி
பேரணி

அறந்தாங்கியில் உலக சமாதானத்துக்கான விழிப்புணா்வு பேரணி

அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக சமாதானத்துக்கான விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்டக் கல்வி அலுவலா்கள்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், ஜூனியா் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி, அறந்தாங்கி தி போா்ட் சிட்டி ரோட்டரி, பிரண்ட்ஸ் ரோட்டரி ஆகியவற்றின் சாா்பில் உலக சமாதானத்துக்கான விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் விஜய், மீமிசல் கிங்ஸ் ரோட்டரி தலைவா் தமிழ்ச்செல்வன், பிரண்ட்ஸ் ரோட்டரி தலைவா் வெங்கட்குமாா், போா்ட் சிட்டி ரோட்டரி தலைவா் அப்துல்பாரி, பொருளாளா் முபாரக்அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, வெஸ்ட்லி பள்ளியில் முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com