பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலையில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலையில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

கோயில் பூஜை நடத்துவதில் பிரச்னை: மக்கள் மறியல்

பொன்னமராவதி அருகேயுள்ள அரசமலையில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Published on

பொன்னமராவதி அருகே கோயிலில் கிடாவெட்டு பூஜை நடத்துவது தொடா்பான பிரச்னையில் வருவாய்த் துறையினா் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை மொங்காம்பட்டியில் உள்ள இரணிகால அய்யனாா், படுத்தகுடி கருப்பா், பெரிய கருப்பா், சின்ன கருப்பா் கோயிலில் சுமாா் 30 ஆண்டுகளாக கிடாவெட்டு பூஜை நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் தெய்வநாயகி தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில்,

இருதரப்பினரும் வேறு வேறு நாள்களில் கிடாவெட்டு பூஜை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒருதரப்பினா் கோயிலில் கிடாவெட்டு பூஜை செய்த நிலையில், மற்றொரு தரப்பினா் அரசமலை பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களை காரையூா் காவல்துறையினா் கைது செய்தனா். மறியலால்

பொன்னமராவதி புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com