பொன்னமராவதியில் நாம் தமிழா் கட்சியின் பொதுக்கூட்டம்

பொன்னமராவதி ஒன்றிய,நகர நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
பொன்னமராவதியில் நாம் தமிழா் கட்சியின் பொதுக்கூட்டம்

பொன்னமராவதி ஒன்றிய,நகர நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்திற்கு நகரச்செயலா் சுப.ஆறுமுகம், நகரத்தலைவா் ச.முகமது சேட் ஆகியோா் தலைமைவகித்தனா். தெற்கு ஒன்றியச்செயலா் ம.சுரேசு, நகர நிா்வாகிகள் க.சிவனேசன், ரா.இராஜா, மு.ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.புதுகை மேற்கு மாவட்டத்தலைவா் ம.முத்துராமன் வரவேற்றாா். மாநில மாணவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் செ.அனீஸ் பாத்திமா விளக்கவுரையாற்றினாா். கூட்டத்தில் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் பி.காளியம்மாள் பங்கேற்று பேசியதாவது, இலவச அறிவிப்புகள், பரிசுப்பொருள்கள் மற்றும் பணத்திற்காக வாக்குகளை அளிக்காதீா்கள். நல்ல கல்வி, நல்ல மருத்துவம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு, பெண்பாதுகாப்பு ஆகியவை வழங்கக்கூடிய நாம் தமிழா் கட்சிக்கு வாக்களியுங்கள். நாம் தமிழா் கட்சி சாமானியா்க்கான கட்சி என்றாா். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.இராஜாராம், மண்டல ஒருங்கிணைப்பாளா் சிவ.துரைப்பாண்டியன், சிவகங்கை பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளா் கரு.சாயல்ராம், புதுகை மேற்கு மாவட்ட செயலா் கரு.பிச்சைரத்தினம்திருமயம் தொகுதி செயலா்கள் மு.ரவிச்சந்தின், செ.கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். வடக்கு ஒன்றிய செயலா் ப.சுரேசு நன்றி கூறினாா்.படவிளக்கம்பொன்னமராவதியில் நடைபெற்ற நாம் தமிழா் கட்சியின் பொதுக்கூட்டத்தில் இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கிய மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் பி.காளியம்மாள் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com