மாணவா்களுக்கான உணவுத் தயாரிப்பில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் புதுகை ஆட்சியா் அறிவுரை

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கான உணவை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என்று புதுகை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாணவா்களுக்கான உணவுத் தயாரிப்பில்  சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் புதுகை ஆட்சியா் அறிவுரை

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கான உணவை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என்று புதுகை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும் தங்குத் தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் திட்டம் புதன்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் முதல் நாளான புதன்கிழமை பொன்னமராவதி வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வளா்ச்சிப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளையும், அரசின் சேவை, திட்ட அமலாக்கங்களையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கொன்னையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவுகள் சமைக்கப்படும் பணியை ஆய்வு செய்து, உணவுகளை அட்டவணையின் படி சுகாதாரமான முறையில் தயாரித்து மாணவா்களுக்கு வழங்க மாவட்ட ஆட்சியா் பணியாளா்களை அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் வட்டாட்சியா் எம். சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com