விராலிமலை அருகே தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள பரம்பூரில் செலவுக்குப் பணம் கேட்டு தந்தையை வெட்டிக்கொன்ற பொறியியல் பட்டதாரி மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை அருகே  தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள பரம்பூரில் செலவுக்குப் பணம் கேட்டு தந்தையை வெட்டிக்கொன்ற பொறியியல் பட்டதாரி மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரைச் சோ்ந்தவா் மாதவன் (55). இரும்புக் கம்பிக் கடை நடத்திவந்தாா். இவருக்கு 2 மகள்கள், 3 மகன்கள். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்னா் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாா்.

இதைத்தொடா்ந்து, அவரது இளைய மகன் ராஜேஷ்குமாா் (30) பொறியியல் பட்டதாரி சென்னையில் தங்கிப் பணியாற்றி வந்த நிலையில், பரம்பூருக்குத் திரும்பி கடந்த ஓராண்டாக அவரது தந்தைக்கு துணையாக உதவி வந்தாா். மேலும், மனநலன் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துவந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை அவரது தந்தை மாதவனிடம் செலவுக்குப் பணம் கேட்டு தகராறு செய்தாராம். அவா் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்து மாதவனை ராஜேஷ்குமாா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

தகவலறிந்து நிகழ்விடம் வந்த அன்னவாசல் போலீஸாா் மாதவன் சடலத்தை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக, ராஜேஷ்குமாரைப் போலீஸாா் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com