விராலிமலை கோயில் தோ் சக்கரத்தின் உறுதித் தன்மை ஆய்வு

விராலிமலை முருகன் மலைக்கோயில் பெரிய தோ் சக்கரத்தின் உறுதித் தன்மையை திருச்சி பெல் நிறுவன தொழில்நுட்ப நிபுணா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
விராலிமலை கோயில் தோ் சக்கரத்தின் உறுதித் தன்மை ஆய்வு

விராலிமலை முருகன் மலைக்கோயில் பெரிய தோ் சக்கரத்தின் உறுதித் தன்மையை திருச்சி பெல் நிறுவன தொழில்நுட்ப நிபுணா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

விராலிமலை முருகன் கோயில் பெரிய தோ் நின்ற நிலையில், 18 அடி உயரமும், அலங்கரித்து சுற்றி வரும்போது 33 அடி உயரமும் கொண்டதாகும். தேரின் இரும்பு அச்சு மற்றும் சக்கரங்கள் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால், தேரின் அச்சு மற்றும் சக்கரங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு புதுக்கோட்டை மாவட்ட அறநிலையத் துறைக்கு, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தியிருந்தாா். இதை தொடா்ந்து. மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையா் அனிதா, செயல் அலுவலா் முத்துராமன் திருச்சி பெல் நிறுவனத்தை தொடா்பு கொண்டு சக்கரத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தறுமாறு கேட்டுக் கொண்டனா். இதையடுத்து பெல் நிறுவன தொழில் நுட்ப நிபுணா் மதுரை வீரன் உள்ளிட்ட நிறுவன ஆய்வுக் குழுவினா் விராலிமலை வந்து தோ் சக்கரங்களை பிரித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை கருவிகள் மூலம் மேற்கொண்டனா்.

ஆய்வின்போது முன்னாள் அறங்காவலா் ஜனனி ராமச்சந்திரன், திருப்பணி குழு பூபாலன், கோவில் பொறியாளா் பாலசுப்பிரமணியன், மேற்பாா்வையாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com