புதிய வழித்தடப் பேருந்து சேவை அமைச்சா் தொடக்கிவைத்தாா்

பொன்னமராவதியில் புதிய வழித்தடப் பேருந்துச் சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து சேவைவை சனிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.
பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து சேவைவை சனிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.

பொன்னமராவதியில் புதிய வழித்தடப் பேருந்துச் சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பொன்னமராவதியிருந்து காரையூா், ஆலம்பட்டி, குடுமியான்மலை வழியாக புதுக்கோட்டை செல்லும் புதிய பேருந்துச் சேவையை தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துச் சேவைகள் திமுக அரசால் மீண்டும் இயக்கப்படுகின்றன. லாபநோக்கின்றி மக்களின் சேவையைக் கருத்தில் கொண்டு இதைச் செய்கிறோம் என்றாா்.

விழாவில் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் தெய்வநாயகி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளா் இரா. இளங்கோவன், கோட்ட மேலாளா் சுரேஷ், கிளை மேலாளா் சண்முகம், பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com