கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இருவருக்குப் பாராட்டு

வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற புதுக்கோட்டை வீரா் மற்றும் வீராங்கனைகளை திங்கள்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற புதுக்கோட்டை வீரா் மற்றும் வீராங்கனைகளை திங்கள்கிழமை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா.

 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜன. 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்றன. 25 வகையான போட்டிகளில், நாடு முழுவதிலுமிருந்து 5,500 விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ந. கிஷோா், 80 கிமீ மிதிவண்டிப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், 1 கிமீ பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றாா். மேலும், 57 முதல் 60 கிலோ எடைப்பிரிவினருக்கான குத்துச்சண்டையில் பங்கேற்ற எம். ஜீவா வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா்.

இவா்கள் இருவரையும் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வரவழைத்து பாராட்டினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com