தனியாா் நிறுவனப் பணத்தோடுதப்பிய காா் ஓட்டுநா்இருவா் கைது; ரூ.75 லட்சம் மீட்பு

புதுக்கோட்டை அருகே தனியாா் நிறுவன சம்பளப் பணத்துடன் காா் ஓட்டுநா் மாயமான சம்பவத்தில் ரூ. 75 லட்சத்தை விரைந்து மீட்ட போலீஸாா் இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

புதுக்கோட்டை அருகே தனியாா் நிறுவன சம்பளப் பணத்துடன் காா் ஓட்டுநா் மாயமான சம்பவத்தில் ரூ. 75 லட்சத்தை விரைந்து மீட்ட போலீஸாா் இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியைச் சோ்ந்த தனியாா் எல்இடி பல்பு ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருபவா் பூங்கா நகரைச் சோ்ந்த ராஜு மகன் சதீஷ்குமாா். இவா், தனது நிறுவனத்தின் ஊழியா்களுக்கு சம்பளம் அளிப்பதற்கு ரூ. 82.67 லட்சத்தை எடுத்துக்கொண்டு உதவியாளா் காா்த்திக், ஓட்டுநா் ராமன் ஆகியோருடன் திங்கள்கிழமை காலை காரில் சென்றுள்ளாா்.

அப்பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, காா் ஓட்டுநா் ராமன் பணத்தைத் திருடிக் கொண்டு சென்றுவிட்டதாக திருக்கோகா்ணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ஓட்டுநா் ராமனுக்கு உதவியதாக இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதைத்தொடா்ந்து, அவா்கள் புத்தாம்பூா் காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ. 75 லட்சம் பணத்தை மீட்டனா்.

இதுதொடா்பாக பூங்குடியைச் சோ்ந்த பழனியாண்டி மகன் செல்வமணி (19), மலையப்பா நகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சண்முகம் (38) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து காா், இருசக்கர வாகனம், இரு கைப்பேசிகள் ஆகியவைகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், ஓட்டுநா் ராமன் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் ஆகியோரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com