பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்தவா்கள் பரிசு பெற அழைப்பு

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு பொதுத்தோ்வுகளில் (எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2) முதல் இரு இடங்களைப் பிடித்த

புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு பொதுத்தோ்வுகளில் (எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2) முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு கலைஞா் தமிழ்ச் சங்கம் சாா்பில் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து இச்சங்கத்தின் செயலா் த. சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நகா்மன்றத்தில் வரும் பிப். 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கலைஞா் தமிழ்ச் சங்கம் சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழா, தமிழ் - தமிழா் திருநாள், திருவள்ளுவா் திருநாள் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, எழுத்தாளா்கள் நா. முத்துநிலவன், நந்தலாலா ஆகியோா் பேசுகின்றனா். எனவே, கடந்தாண்டில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்கள் பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதிக் கடிதம் பெற்று விழாவில் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு, 99431 37999.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com