போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 15ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தம் அமைத்து தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பணிமனை முன்பு
போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 15ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தம் அமைத்து தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை பணிமனை முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் டி.எம். கணேசன், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், துணைத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஓய்வுகால பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com