மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு எதிராக சிஐடியு ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை எதிா்த்தும், அச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், அதீதத் தண்டனைகள், அபராதம், கட்டண உயா்வுகளைத் திரும்பப்பெறக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலா் க. ரெத்தினவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா பேசினாா். மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் நிறைவுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com