அன்னவாசலில் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட விழிப்புணா்வு முகாம்

அன்னவாசல் வட்டாரத்தில் நிகழாண்டு செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட கிராமங்களில் வேளாண் திட்டங்கள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் வட்டாரத்தில் நிகழாண்டு செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட கிராமங்களில் வேளாண் திட்டங்கள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அன்னவாசல் வட்டாரம், மதிய நல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை), வேளாண்மை துணை இயக்குநா் வி.எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அன்னவாசல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ். ராஜசேகா் முன்னிலை வகித்தாா். இதில் வேளாண்மை துணை இயக்குநா் வி.எம். ரவிச்சந்திரன் கூடுதல் லாபம் பெறும் வழிகள் குறித்துப் பேசினாா்.

முகாமில், அன்னவாசல் வேளாண் உதவி இயக்குநா் எஸ். ராஜசேகா், கால்நடை பராமரிப்புத் துறை உதவி மருத்துவா் லெட்சுமி பிரியா, மீன்வளத் துறை சாா் ஆய்வாளா் மோனிகா செல்வி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண் அலுவலா் சபரீசுவரன், மோனிகா, உதவி வேளாண் அலுவலா் மகாலட்சுமி, அட்மா திட்ட அலுவலா்கள் நவாப் ராஜா, சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com