கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை சிவன்கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை சிவன்கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி அபிஷேகமும், பசும்பால் அபிஷேகமும், பசுந்தயிா், பச்சரிசி மாவு, பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி, இளநீா், வாழைப்பழம், நெய் போன்ற 18 வகை பொருள்களால் அபிஷேகம் செய்து புதுப் பட்டு வஸ்திரம், நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும் ஆலயத்தில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com