பொன்னமராவதியில் ரவுண்டானா இந்திய கம்யூ. கட்சி கோரிக்கை

பொன்னமராவதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் முக்கிய சாலையில் ரவுண்டாணா அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் முக்கிய சாலையில் ரவுண்டாணா அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். இராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பொன்னமராவதி பேருந்துநிலையத்திலிருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் உலகம்பட்டி, இந்திரா நகா் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து மிகுந்த இந்த நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் இச்சாலையில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, காந்திசிலை அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியிலும் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com