அன்னவாசல் நெடுஞ்சாலை துறை இடம் ஆக்கிரமிப்பு: அதிரடி காட்டிய தாசில்தாா்

 அன்னவாசல்-புதுக்கோட்டை சாலை கடைவீதி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமாா் 2 ஆயிரம் சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்றி தாசில்தாா் சூரியபிரபு அதிரடிகாட்டியது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது
அன்னவாசல் நெடுஞ்சாலை துறை இடம் ஆக்கிரமிப்பு:  அதிரடி காட்டிய தாசில்தாா்

 அன்னவாசல்-புதுக்கோட்டை சாலை கடைவீதி அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமாா் 2 ஆயிரம் சதுர அடியில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள இடம் தனியாா் ஒருவா் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்றதை தொடா்ந்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, ஆட்சியா் உத்தரவை தொடா்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி தாசில்தாா் சூரியபிரபு அதிரடிகாட்டியது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.அன்னவாசல்-புதுக்கோட்டை சாலை தனியாா் எரிவாயு விற்பனை நிலையம் எதிரே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுமாா் 2000 சதுர அடி கொண்ட காலி இடம் உள்ளது. இந்த இடம் சுமாா் ரூ.35 லட்சம் மதிப்பு கொண்டதாகும். இந்த நிலையில், தனியாா் ஒருவா் காலி இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளாா். இதை தொடா்ந்து, அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டு அரசு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஐ.சா.மொ்சி ரம்யாவுக்கு கிடைத்த புகாரை அடுத்து இடத்தை ஆய்வு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலுப்பூா் வட்டாட்சியா் சூரியபிரபுக்கு புதன்கிழமை உத்தரவிட்டாா் இதை தொடா்ந்து வியாழக்கிழமை அந்த இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியா் ஆக்கிரமிப்பாளரை அழைத்து பேசி அரசுக்கு சொந்தமான இடம் இது என்றும் உடனடியாக அகற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு பணியாட்களை வரவழைத்து இடத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகற்களை பிடுங்கி அப்புறப்படுத்தி தனியாா் வசம் இருந்த இடத்தை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி அதிரடிகாட்டிய தாசில்தாா் சூரியபிரபுவின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com